அமெரிக்காவில் பீட்சா டெலிவரி செய்த பொலிஸார் – ஊழியர் கைதானதால் நடந்த விபரீதம்

அமெரிக்காவில் உணவுப் பரிமாற்ற சேவையில் ஈடுபட்ட ஒரு டெலிவரி ஊழியர், கடந்த வாரம் போக்குவரத்து விதிமீறலுக்காக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆனால் அவர் எடுத்துச் செல்ல வேண்டிய பீட்சா ஆர்டரை முடிக்கும் பணியை பொலிஸார் மேற்கொண்ட சம்பவம் பலரின் அவதானத்திற்குள்ளாகியுள்ளது.
அரிசோனா மாநிலத்தின் டெம்பே நகரைச் சேர்ந்த அந்த ஊழியர், வாடிக்கையாளர் ஒருவர் ஆர்டர் செய்த பீட்சாவை வினியோகிக்கச் சென்ற போது கைது செய்யப்பட்டார். ஆனால் அவரது கைதுக்குப் பிறகும், அவரது டெலிவரி பணியை நிறைவு செய்ய அதிகாரிகள் விரும்பினர்.
உடனே, அவருடைய மொபைல் செயலியில் இருந்த வாடிக்கையாளர் முகவரியை கொண்டு பொலிஸார் பீட்சாவை எடுத்துச் சென்று நேரில் வழங்கினர்.
அவர்களைப் பார்த்த வாடிக்கையாளர், தனது பீட்சா ஆர்டரை போலீசார் கொண்டு வந்ததை பார்த்து மிகுந்த அதிர்ச்சியுடன் இருக்கிறார்.
இச்சம்பவத்தின் வீடியோவை டெம்பே பொலிஸார் தங்களது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். அதில், “பாதுகாப்போ அல்லது பீட்சாவோ – எதற்காக வேண்டுமானாலும் நாங்கள் 24 மணி நேரமும் தயாராக இருக்கிறோம்,” என்ற விளக்கத்துடன் இந்த செயலுக்கு நகைச்சுவையுடனும், பொறுப்புடனும் செல்வாக்கை ஏற்படுத்தியுள்ளனர்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி, பொதுமக்களிடையே போலீசாரின் மனிதநேய நடவடிக்கைக்கு பாராட்டுகள் கிடைத்து வருகின்றன.