இந்தியாவில் வங்கி பணத்தை திருடி சூதாடிய மேலாளர் – கைது செய்த பொலிஸார்

பீகாரில் இருக்கும் ‘கோட்டக் மகேந்திரா’ வங்கியின் கிளை ஒன்றில் மேலாளராகப் பணியாற்றிய நபர் ஒருவர், வங்கிப் பணத்தை எடுத்து சூதாடியதாகக் கூறப்பட்டது.
பந்தய, சூதாட்டச் செயலிக்கு அடிமையான அந்த ஆடவர் கடந்த ஈராண்டுகளாகப் பீகார் அரசின் வங்கிக் கணக்கிலிருந்து கோடிக்கணக்கான பணத்தைத் திருடி சூதாட்டத்தில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
குறிப்பாக, பீகார் அரசின் மாவட்ட நிலம் கையகப்படுத்தும் பணியில் இருக்கும் அதிகாரிக்கான காசோலைகளில் போலி கையெழுத்து இட்டும் போலி காசோலைகளைத் தயாரித்தும் அந்த நபர் மோசடி செய்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.
மொத்தம் ரூ.31.93 கோடி வங்கி பணத்தை அந்த மேலாளர் சுருட்டியதாகச் சொல்லப்பட்டது
பிடிபடாமல் இருக்க, வாடிக்கையாளர்களின் ஆதார் விவரங்களைச் சட்டவிரோதமாகப் பயன்படுத்தி 21 போலி வங்கிக் கணக்குகளை அவர் திறந்ததாகவும் அவற்றில் பணத்தை பரிமாற்றம் செய்து, அந்தப் பணத்தை வெளிநாடுகளில் உள்ள சட்டவிரோத பந்தயச் செயலிகளுக்கு அனுப்பியதாகவும் கூறப்பட்டது.
மோசடியில் ஈடுபட்ட வங்கி மேலாளரைக் காவல்துறை கைதுசெய்தது.