ஐரோப்பா

பற்றி எரியும் போலந்தின் வணிக வளாகம் : 50 மீட்பு குழுக்கள் குவிப்பு!

போலந்தின் தலைநகரில் உள்ள பியாலோலேகா மாவட்டத்தில் வணிக வளாகத்தில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

தி மேரிவில்ஸ்கா 44 ஷாப்பிங் வளாகத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஏறக்குறைய 80 சதவீதமான பகுதி தீயில் எரிந்து நாசமாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இரசாயன மற்றும் சுற்றுச்சூழல் மீட்பு நிபுணர்கள் உட்பட 50 குழுக்கள் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் தீயணைப்புப் படை தெரிவித்துள்ளது.

தீ விபத்தை தொடர்ந்து   ஜன்னல்களை மூடிக்கொண்டு வீட்டில் இருக்குமாறு பொதுமக்களை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

தீவிபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதுடன், விபத்துக்கான காரணத்தை அறிய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!