ஐரோப்பா

பெலாரஸுடனான எல்லையை மூடுவோம் என போலந்து எச்சரிக்கை!

வாக்னர் கூலிப்படையினர் சம்பந்தப்பட்ட ஏதேனும் ஒரு சம்பவம் நடத்தால் போலந்து மற்றும் பால்டிக் நாடுகள் பெலாரஸுடனான தங்கள் எல்லைகளை முற்றிலுமாக மூடும் என போலந்து உள்துறை அமைச்சர் இன்று (28.08) எச்சரித்துள்ளார்.

நேட்டோவின் கிழக்குப் பகுதியில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் போலந்து உள்துறை அமைச்சரின் இந்த கருத்து வந்துள்ளது.

பெலாரஸுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ உறுப்பினர்களான லாட்வியா, லிதுவேனியா மற்றும் போலந்து ஆகிய நாடுகள் வாக்னர் கூலிப்படையினர் பெலாரஸுக்கு வந்தத்தில் இருந்து எல்லைப் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் வாக்னர் குழு பெலாரஸை விட்டு வெளியேற வேண்டும் என்றும் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் உடனடியாக எல்லைப் பகுதியை விட்டு வெளியேறி அவர்களின் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்றும் போலந்து உள்துறை அமைச்சர் மின்ஸ்கில் உள்ள அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளார்.

எவ்வாறாயினும் இந்த கருத்துக்களுக்கு பெலாரஸ் வெளியுறவு அமைச்சகம் உடனடியாக பதிலளிக்கவில்லை.

(Visited 12 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்