பிரான்ஸில் பிறந்து 17 நாட்களே ஆன குழந்தையை கடத்திய விஷமிகள் : தேடுதல் வேட்டையில் பொலிஸார்!

பிரான்ஸ் – பாரீஸ் மருத்துவமனையின் மகப்பேறு வார்டில் இருந்து பிறந்து 17 நாட்களே ஆன ஆண் குழந்தை ஒன்று கடத்தப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
பாரிஸில் உள்ள Seine-Saint-Denis இல் உள்ள காவல் துறையினர் இது தொடர்பான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளனர்.
குறித்த குழந்தை குறை பிரசவத்தில் பிறந்துள்ளதாகவும், ஆகையால் முறையான சிகிச்சைகள் தேவை எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
குழந்தையின் 23 வயது தந்தை மற்றும் 25 வயது தாயார் மட்டுமே சந்தேக நபர்களாக அடையாளம் காணப்பட்டதாக கூறிய பொலிஸார் அவர்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.
இவர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ள ஒரு தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்பட்டுள்ளது.
(Visited 11 times, 1 visits today)