குவைத்தில் நடைபெற்ற கால்பந்து போட்டியை பார்வையிட்ட பிரதமர் மோடி
குவைத்தின் அமீர் ஷேக் மெஷல் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாவின் அழைப்பின் பேரில் பிரதமர் நரேந்திர மோடி குவைத்தில் 26வது அரேபிய வளைகுடா கோப்பை கால்பந்துத் போட்டியின் தொடக்க விழாவில் ‘கௌரவ விருந்தினராக’ கலந்து கொண்டார்.
பிரமாண்ட திறப்பு விழாவில் பிரதமர் அமீர், பட்டத்து இளவரசர் மற்றும் குவைத் பிரதமர் ஆகியோருடன் கலந்து கொண்டார்.
பிரதமர் மோடி X ல், இந்த மாபெரும் விளையாட்டு நிகழ்வு “பிராந்தியத்தில் கால்பந்தின் உணர்வைக் கொண்டாடுகிறது” என்று தெரிவித்தார்.
“அரேபிய வளைகுடாக் கோப்பையின் தொடக்க விழாவில் கலந்துகொண்டேன். இந்த மாபெரும் விளையாட்டு நிகழ்வு அப்பகுதியில் கால்பந்தின் உணர்வைக் கொண்டாடுகிறது. என்னை சாட்சியாக அழைத்ததற்காக குவைத்தின் அமீர் ஷேக் மெஷல் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாஹ் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். “என்று பதிவிட்டிருந்தார்.