பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்காக பிரேசில் சென்ற பிரதமர் மோடி

‘பிரிக்ஸ்’ உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரேசில் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
கானா, டிரினிடாட் அண்ட டுபாகோ, அர்ஜென்டினா நாடுகளை தொடர்ந்து 4வது நாடாக, பிரேசிலுக்கு, அந்நாட்டு ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி சென்றார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அங்கு, இந்திய புலம் பெயர்ந்தோர் ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்ட ஒரு கலாசார நடனத்தை நடத்தினர். மோடி 17வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார்.
‘17வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறேன். பிரேசிலின் ஜனாதிபதி லுலா அழைப்பின் பேரில், பிரேசில் தலைநகர் பிரேசிலியாவுக்கு செல்கிறேன். இந்த பயணத்தில் ஆக்கப்பூர்வ பேச்சுவார்த்தைகள் நடக்கும் என்று எதிர்பார்க்கிறேன்’ என மோடி தெரிவித்துள்ளார்.
பிரேசில் நாட்டுக்கான பயணம் முடிந்ததும் இறுதியாக நமீபியா செல்ல உள்ளார்.
முன்னதாக கானா மற்றும் டிரினிடாட் அண்டு டுபாகோ ஆகிய 2 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அந்த இரு நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேசினார்.அப்போது அவருக்கு 2 நாடுகளிலும் அந்நாடுகளின் உயரிய விருது வழங்கி கவுரவித்தனர்.