செய்தி வட அமெரிக்கா

நியூயார்க்கில் தொழில்நுட்ப தலைவர்களை சந்தித்த பிரதமர் மோடி

குவாட் அமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி அமெரிக்க வந்துள்ளார். அவர் அதிபர் ஜோ பைடனை சந்தித்து பேசினார். நியூயார்கில் நடைபெற்ற இந்திய வம்சாவளியினரை சந்தித்து உரையாற்றினார்.

இந்நிலையில், புதுமை, ஒத்துழைப்பு மற்றும் இந்தியாவின் வளர்ந்து வரும் விண்வெளி தொழில்நுட்பம் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் வகையில், அமெரிக்காவின் சிறந்த தொழில்நுட்ப தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று உயர்மட்ட ஆலோசனை நடத்தினார்.

மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (MIT) ஸ்கூல் ஆஃப் இன்ஜினியரிங் நடத்திய இந்த கூட்டத்தில், செயற்கை நுண்ணறிவு, குவாண்டம் கம்ப்யூட்டிங், செமிகண்டக்டர்கள் மற்றும் பயோடெக்னாலஜி ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்றனர்.

மேலும் இந்த கூட்டத்தில் கூகுளின் சுந்தர் பிச்சை, என்விடியாவின் ஜென்சன் ஹுவாங் மற்றும் அடோப்பின் சாந்தனு நாராயண் போன்ற முக்கிய CEOகள் கலந்து கொண்டனர்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில், “நியூயார்க்கில் தொழில்நுட்ப தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் ஒரு பயனுள்ள சந்திப்பு நடைபெற்றது. விண்வெளி தொழில்நுட்பம், கண்டுபிடிப்புகள் மற்றும் பல அம்சங்களைப் பற்றி விவாதித்தேன். மேலும் இந்தத் துறையில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றங்களை எடுத்துரைத்தேன். இந்தியா மீதான அபரிமிதமான நம்பிக்கையைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன் என்று பதிவிட்டார்.

(Visited 46 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி