செய்தி

5 நாள் பயணமாக நைஜீரியா, பிரேசில் மற்றும் கயானா புறப்பட்ட பிரதமர் மோடி

நைஜீரியா, பிரேசில், கயானா நாடுகளுக்கு 5 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து புறப்பட்டார். இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில்,

இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில், “நைஜீரியா, பிரேசில், கயானா ஆகிய நாடுகளுக்கு ஐந்து நாள் பயணத்தை நான் தொடங்கியுள்ளேன்.

நைஜீரிய அதிபர் போலா அகமது டினுபுவின் அழைப்பை ஏற்று, மேற்கு ஆப்பிரிக்க பிராந்தியத்தில் நமது நெருங்கிய கூட்டாளி நாடான நைஜீரியாவுக்கு நான் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.

ஜனநாயகம் மற்றும் பன்முகத்தன்மை மீதான பகிரப்பட்ட நம்பிக்கையின் அடிப்படையில் நமது கூட்டாண்மையை உருவாக்க எனது பயணம் ஒரு வாய்ப்பாக அமையும். இந்தியில் எனக்கு அன்பான வரவேற்புச் செய்திகளை அனுப்பியுள்ள இந்திய சமூகத்தினரையும், நைஜீரியாவைச் சேர்ந்த நண்பர்களையும் சந்திப்பதை நான் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்.

பிரேசிலில், 19வது ஜி20 உச்சிமாநாட்டில் நான் கலந்து கொள்கிறேன். கடந்த ஆண்டு, இந்தியாவின் வெற்றிகரமான தலைமைப் பொறுப்பு, ஜி20ஐ மக்களின் ஜி20 ஆக உயர்த்தியது. உலகளாவிய தெற்கின் முன்னுரிமைகளை அதன் நிகழ்ச்சி நிரல் பிரதானப்படுத்தியது.

இந்த ஆண்டு, பிரேசில் இந்தியாவின் பாரம்பரியத்தைக் கட்டமைத்துள்ளது. “ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்” என்ற நமது தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப அர்த்தமுள்ள விவாதங்களை நான் எதிர்நோக்கியுள்ளேன். பல்வேறு தலைவர்களுடன் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்த கருத்துக்களை பரிமாறிக் கொள்ளவும் இந்த வாய்ப்பை நான் பயன்படுத்திக் கொள்வேன்.

கயானா அதிபர் முகமது இர்பான் அலியின் அழைப்பின் பேரில் கயானாவுக்கு நான் மேற்கொள்ளும் பயணம், கடந்த 50 ஆண்டுகளில் இந்தியப் பிரதமர் ஒருவர் மேற்கொள்ளும் முதல் பயணமாக இருக்கும்.

இந்தப் பயணத்தின்போது, 2வது இந்தியா- கரீபியன் சமுதாய உச்சிமாநாட்டில் பங்கேற்கும் கரீபியன் நட்பு நாடுகளின் தலைவர்களுடன் நானும் பங்கேற்க உள்ளேன். நாங்கள் நெருங்கிய உறவுகளால் ஒன்றாக வலுவுடன் நிற்கிறோம். வரலாற்று உறவுகளை புதுப்பிக்கவும், நமது ஒத்துழைப்பை புதிய களங்களுக்கு விரிவுபடுத்தவும் இந்த உச்சிமாநாடு நமக்கு உதவும்,”என்று பிரதமர் தெரிவித்தார்.

(Visited 4 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி