மும்பையில் ISKCON கோயிலை திறந்து வைத்த பிரதமர் மோடி
நவி மும்பையில் உள்ள கர்கார் பகுதியில் சர்வதேச கிருஷ்ண பக்தர்கள் சங்கமான இஸ்கான் தரப்பால் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ ஸ்ரீ ராதா மதன்மோகன்ஜி இஸ்கான் கோயிலை பிரதமர் மோடி. திறந்துவைத்தார்.
அதனை தொடர்ந்து பேசிய பிரதமர், “இஸ்கான் கோயிலானது நம்பிக்கை, தத்துவம் மற்றும் ஞானத்தின் மையமாக திகழ்கிறது. இந்திய தேசம் வெறும் நிலப்பகுதி மட்டுமல்ல.இது கலாசாரம் மற்றும் பாரம்பரியம் வாழிம் பூமி. இங்கு ஞானம் என்பது ஆன்மீகத்தை பற்றி அறிவதேயாகும்” என்று தெரிவித்துள்ளார்.
9 ஏக்கர் பரப்பளவில் வேத பாடசாலை, அருங்காட்சியகம், கலையரங்கம், தியான மையம் உள்ளிட்ட பல அம்சங்களுடன் கோயில் கட்டப்பட்டுள்ளது.
அண்டை தேசமான வங்கதேசத்தில் இஸ்கானைச் சேர்ந்ததொரு முக்கிய ஆன்மீக குரு கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் இந்தியாவில் இஸ்கான் அமைப்பு பக்தர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்று இஸ்கானின் புதியதொரு கோயிலை பிரதமர் திறந்து வைத்திருப்பது கவனத்தை பெறுகிறது.