ரஷ்ய ஜனாதிபதியின் 73வது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி

இன்று 73வது பிறந்தநாளை கொண்டாடும் ரஷ்ய ஜனாதிபதிக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி அழைப்பு மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து வரவிருக்கும் இந்தியா-ரஷ்யா உச்சிமாநாட்டிற்கு அவரை வரவேற்க ஆவலுடன் காத்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
Xல் ஒரு பதிவில், “எனது நண்பர் ஜனாதிபதி புடினுடன் பேசி, பிறந்தநாள் வாழ்த்துக்களையும், அவரது நல்ல ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தேன். பல ஆண்டுகளாக இந்தியா-ரஷ்யா உறவுகளை ஆழப்படுத்துவதற்கான அவரது தனிப்பட்ட அர்ப்பணிப்பை நான் மிகவும் பாராட்டுகிறேன்” என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
இந்த ஆண்டு இறுதியில் இந்தியா–ரஷ்யா இடையிலான உச்சிமாநாடு தலைநகர் டெல்லியில் நடைபெற உள்ளது.
(Visited 5 times, 1 visits today)