பெல்ஜியத்தின் புதிய தலைவர் பார்ட் டி வெவருக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி
பெல்ஜியத்தின் புதிய தலைவராகப் பொறுப்பேற்றுள்ள பார்ட் டி வெவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“பதவியேற்ற பிரதமர் @Bart_DeWever அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்தியா-பெல்ஜியம் உறவுகளை மேலும் வலுப்படுத்தவும், உலகளாவிய விஷயங்களில் எங்கள் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் இணைந்து பணியாற்றுவதை நான் எதிர்நோக்குகிறேன். உங்கள் பதவிக்காலம் வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள்” என்று பிரதமர் மோடி Xல் பதிவிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்த தேர்தல்களிலிருந்து தற்காலிகத் தலைவராகப் பதவி வகித்த அலெக்சாண்டர் டி குரூவுக்குப் பிறகு, பிளெமிஷ் தேசியவாத N-VA கட்சியின் டி வெவர் பதவியேற்கிறார்.
(Visited 2 times, 2 visits today)