டெக்சாஸ் வெள்ளத்தில் ஏற்பட்ட இழப்பிற்கு பிரதமர் மோடி இரங்கல்
டெக்சாஸில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தில், குறிப்பாக குழந்தைகள் உயிரிழந்ததை அறிந்து மிகவும் வருத்தமடைந்ததாகவும், அமெரிக்க அரசாங்கத்திற்கு தனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் பிரதமர் நரேந்திர மோடி Xல் பதிவிட்டுள்ளார்.
மத்திய டெக்சாஸின் சில பகுதிகளில் பெய்த மழையால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது, இதனால் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
கெர் கவுண்டியில், இரண்டு மணி நேரத்திற்குள் 20 அடிக்கு மேல் உயர்ந்த ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள தனியார் கிறிஸ்தவ கோடைக்கால முகாமான கேம்ப் மிஸ்டிக்கிலிருந்து 20க்கும் மேற்பட்ட சிறுமிகள் காணாமல் போயுள்ளனர்.
கெர் கவுண்டி முழுவதும், இதுவரை நூற்றுக்கணக்கான மக்கள் மீட்கப்பட்டுள்ளனர் அல்லது பலர் ஹெலிகாப்டர் மூலம் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.





