ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள ஜோகன்னஸ்பர்க் சென்றடைந்த பிரதமர் மோடி
தென்னாப்பிரிக்காவின்(South Africa) தலைமையின் கீழ் நடைபெறும் G20 தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி(Narendra Modi) ஜோகன்னஸ்பர்க்(Johannesburg) சென்றடைந்துள்ளார்.
கவுடெங்கில்(Gauteng) உள்ள வாட்டர்குலூஃப்(Waterkloof) விமானப்படை தளத்தில் வந்தடைந்த பிரதமர் மோடிக்கு கலாச்சார பாடல் மற்றும் நடனங்களுடன் பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த உச்சிமாநாட்டில் காலநிலை மாற்றம், எரிசக்தி உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து நரேந்திர மோடி உரையாற்ற உள்ளார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த உச்சிமாநாடு முக்கிய உலகளாவிய பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்க ஒரு வாய்ப்பாக அனைத்து நாடுகளுக்கும் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு ஜி20 உச்சிமாநாட்டின் கருப்பொருள் ‘ஒற்றுமை, சமத்துவம் மற்றும் நிலைத்தன்மை’ ஆகும்.





