நடுவானில் ஆட்டங்கண்ட விமானம் – ஐரோப்பாவுக்கு திசைதிருப்பிய விமானிகள்
அமெரிக்காவின் மயாமி நகருக்குச் சென்றுகொண்டிருந்த விமானம் மோசமாக ஆட்டங்கண்டதால் அது ஐரோப்பாவுக்குத் திரும்பும் நிலை ஏற்பட்டது.
சம்பவத்தில் பயணிகளுக்கும் விமானிகளுக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. விமானத்தில் 254 பயணிகள் இருந்தனர்.
டென்மார்க்கில் உள்ள கோப்பன்ஹேகன் விமான நிலையத்துக்கு விமானம் திசைதிருப்பப்பட்டது. அங்கு அது சோதிக்கப்படும் என்று விமான நிறுவனம் தெரிவித்தது.
விமானம் ஆட்டங்கண்ட பிறகு அதன் மீது சோதனை நடத்தப்படுவது வழக்கம் என்று நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
கோப்பன்ஹேகன் விமான நிலையத்தில் அதற்குத் தேவையான வசதிகள் இருப்பதால் அது அங்கு திசைதிருப்பப்பட்டது.
சமூக ஊடகங்களில் விமானத்திற்குள் பொருள்கள் சிதறிக்கிடக்கும் படங்கள் பகிரப்பட்டன.





