இந்தோனேசியாவில் திடீரென ஒடுபாதையிலிருந்து விலகிய விமானம் – காயமடைந்த பயணிகள்

விமானமொன்று ஓடுபாதையிலிருந்து விலகிய சம்பவத்தில் பயணிகள் சிலர் காயமடைந்துள்ளனர்.
இந்தோனேசியாவின் கிழக்கு வட்டாரமான பாப்புவாவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
Trigana Air நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த ATR-42 ரக விமானம் யப்பேன் தீவிலிருந்து பாப்புவா தலைநகர் ஜெயபுராவுக்குப் (Jayapura) புறப்படும்போது சம்பவம் நடந்தது.
காயம் தவிர யாருக்கும் பெரிய ஆபத்து எதுவும் ஏற்படவில்லை.
பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக உள்ளூர்க் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. மலைகள் நிறைந்த பாப்புவாவில் மோசமான வானிலையால் விமானப் பயணங்கள் அடிக்கடி பாதிக்கப்படுவதுண்டு.
இதற்குமுன்னர் 2015ஆம் ஆண்டு Trigana Air விமானம் விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த 54 பேரும் உயிரிழந்துள்ளனர்.
(Visited 20 times, 1 visits today)