33,000 அடி உயரத்தில் பறந்த விமானம் : கத்தியை காட்டி மிரட்டிய பயணியால் பரபரப்பு!

விமானத்தில் பயணி ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி மது மற்றும் வோட்கா கேட்டு அராஜகத்தில் ஈடுபட்ட காணொளி வெளியாகி வைரலாகி வருகிறது.
சோச்சிக்கு ரிசார்ட் செல்லும் போயிங் 737 விமானம் காஸ்பியன் கடலுக்கு மேலே 33,000ft அடி உயரத்தில் பறந்து சென்றபோது 63 வயதான நபர் ஒருவர் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மதுபானங்களை கேட்டு மிரட்டியுள்ளார்.
இதன்போது சில பயணிகள் தங்கள் இருக்கையில் இருந்து பயந்து ஓடி திரிந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் விமானம் சோச்சியில் தரையிறங்கியதும் காவல் துறையினர் அவரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
(Visited 23 times, 1 visits today)