ஜேர்மனியில் நடுவானில் கொந்தளிப்பை சந்தித்த விமானம் : அவசரமாக தரையிறக்கம்!

ஜேர்மனியில் ஏற்பட்ட கடுமையான புயல் காரணமாக ரியானேர் விமானம் அவசரமாக தரையிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. குறித்த புயலால் 09 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
179 பயணிகள் மற்றும் ஆறு பணியாளர்களுடன் பெர்லினில் இருந்து மிலனுக்குப் பயணித்த விமானம், இரவு 8:30 மணியளவில் மிகவும் கடுமையான கொந்தளிப்பை சந்தித்ததால், அவசரமான தரையிறக்கப்பட்டுள்ளது.
விமானி பவேரியாவில் உள்ள மெம்மிங்கன் விமான நிலையத்தில் திட்டமிடப்படாத தரையிறக்கத்தை மேற்கொண்டுள்ளார். இதன்போது எட்டு பயணிகள் மற்றும் ஒரு பணியாளர் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மூன்று பேர் சிகிச்சைக்காக மெம்மிங்கனில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்; காயமடைந்த மற்றவர்கள் வெளிநோயாளர் சிகிச்சைக்குப் பிறகு விடுவிக்கப்பட்டனர்.
(Visited 3 times, 1 visits today)