அமெரிக்காவில் வீடுகளின் மீது மோதிய விமானத்தால் பரபரப்பு – இருவர் மரணம்
அமெரிக்காவில் வீடுகளின் மீது விமானம் ஒன்று மோதி சென்றதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கலிபோர்னியாவின் தெற்குப் பகுதியில் உள்ள குடியிருப்பு வட்டாரத்தில் ஒரு விமானம் விழுந்து நொறுங்கியது.
அதிலிருந்த இருவர் உயிரிழந்துள்ளனர். வீடுகளும் சேதமடைந்தன.
ஒரே இயந்திரத்தைக்கொண்ட விமானம் இரண்டு வீடுகளின் மீது மோதியது. அந்த வீடுகளில் மக்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர்களில் எவரும் காயமடைந்ததாகத் தகவல் இல்லை.
வீடுகளின் கூரைகளில் ஓட்டைகள், சிதைந்துபோன வேலிகள், சுவர்களைக் காட்டும் படங்களை அந்நகரின் தீயணைப்புத் துறை பதிவிட்டது.
விமானி, பயணி ஆகியோருடன் ஒரு நாயும் விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





