கலிபோர்னியாவில் கட்டடம் ஒன்றுடன் மோதிய விமானம் : இருவர் பலி, 18 பேர் படுகாயம்!
தெற்கு கலிபோர்னியாவில் ஒரு வணிக கட்டிடம் மீது சிறிய விமானம் மோதியதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன் 18 பேர் காயமடைந்துள்ளனர்.
டிஸ்னிலேண்டிலிருந்து 6 மைல் தொலைவில் அமைந்துள்ள புல்லர்டன் முனிசிபல் விமான நிலையத்திற்கு அருகில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
18 பேருக்கும் சிறிய காயங்கள் முதல் கடுமையான காயங்கள் வரை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏபிசி நியூஸ் படி, ஒன்பது நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர், மீதமுள்ள பாதிக்கப்பட்டவர்கள் தளத்தில் சிகிச்சை பெற்று விடுவிக்கப்பட்டுள்ளாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்துக்கான காரணம் குறித்து தகவல் வெளியாகவில்லை என்பதுடன், அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
(Visited 1 times, 1 visits today)