நியூசிலாந்தில் புறப்பட்ட 20 நிமிடத்தில் பேரழிவில் சிக்கிய விமானம் : அதிர்ச்சியில் பயணிகள்!

ஏர் நியூசிலாந்து விமானம் ஒன்று மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளது. இதனால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஆக்லாந்து விமான நிலையத்திலிருந்து டஹிடி நோக்கிச் சென்ற விமானம் பயணம் தொடங்கிய 20 நிமிடங்களில் பேரழிவை சந்தித்தது.
NZ902 விமானம் பாபீட் தலைநகருக்கு தனது பயணத்தைத் தொடங்கியபோது எதிர்பாராத விதமாக மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளது.
இந்த சம்பவத்தை அடுத்து விமானம் உடனடியாக ஆக்லாந்து விமான நிலையத்திற்கு திரும்பியுள்ளது.
ஆக்லாந்தில் இடியுடன் கூடிய மழை பெய்த நேரத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்தமை குறிப்பிடத்தக்கது.
(Visited 12 times, 1 visits today)