பிரேசிலில் விமான விபத்து – பயணித்த அனைவரும் பலி

பிரேசிலின் வடமேற்கு பகுதியில் உள்ள ஏக்கர் மாகாணத்தில் நேற்று விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
அங்கு பயணித்த 12 பேரும் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
உள்ளூர் நிறுவனமான ART Taxi ஏரியோவால் இயக்கப்படும் இந்த விமானம் புறப்பட்ட உடனேயே விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.
ஒரு குழந்தை உட்பட அங்கிருந்த அனைவரும் இறந்ததாக ஏக்கர் மாநில அரசு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
விபத்துக்கான காரணங்கள் குறித்து தற்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
(Visited 14 times, 1 visits today)