பங்களாதேஷில் விபத்துக்குள்ளான விமானம் – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரிப்பு!
பங்களாதேஷின் தலைநகர் டாக்காவில் பள்ளி கட்டடத்தின் மீது விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதன்படி 07 குழந்தைகள் உள்பட 20 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மற்றும் 104 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில், நகரின் வடக்கு உத்தரா பகுதியில் உள்ள மைல்ஸ்டோன் பள்ளி மற்றும் கல்லூரியின் மைதானத்தில் விமானம் விபத்துக்குள்ளானது.
“மீட்பு நடவடிக்கை இன்னும் தொடர்கிறது,” என்று ISPR இன் இயக்குனர் சமி உத் தவ்லா சவுத்ரி ABC செய்தியிடம் தெரிவித்துள்ளார்.





