மியன்மாரில் தீப்பற்றி எரிந்த விமானம் : முழுவீச்சில் நடைபெறும் மீட்பு பணி!
மியான்மரின் உள்நாட்டுப் போரின் போது கடுமையான சண்டை நடந்த பகுதியில் இராணுவ போர் விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்தது.
ஒரு கிளர்ச்சியாளர் குழு அதை சுட்டு வீழ்த்தியதாகக் கூறியது, அதே நேரத்தில் அரசு நடத்தும் ஊடகங்கள் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் விபத்து நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது எந்த வகையான ஜெட் விமானம் விபத்துக்குள்ளானது, உயிரிழப்புகள் குறித்த எந்த தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.
மேலும் அது விழுந்த பேல் நகரத்தில் தேடுதல் மற்றும் மீட்பு முயற்சி நடந்து வருவதாக அரசு தொலைகாட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
(Visited 1 times, 1 visits today)





