உலகம் செய்தி

மலாவியின் துணை ஜனாதிபதியுடன் பயணித்த விமானம் மாயம் – தேடுதல் நடவடிக்கை தீவிரம்

மலாவியின் துணை ஜனாதிபதி சவுலோஸ் சிலிமா பயணித்த விமானம் காணாமல் போயுள்ளது.

விமானத்தை தேடும் பணிகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மலாவியின் துணை ஜனாதிபதி மற்றும் ஒன்பது பேரை ஏற்றிச் சென்ற இராணுவ விமானம், அந்நாட்டின் தலைநகரான லிலோங்வேக்கு வடக்கே உள்ள மலைப் பகுதிக்கு ஒரு குறுகிய பயணத்தில் இருந்தபோது காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது.

இன்று காலை 9.17 மணியளவில் தென்னாப்பிரிக்காவின் தலைநகரான லிலோங்வேயில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் 51 வயதான துணை ஜனாதிபதி சவுலோஸ் சிலிமா பயணித்த விமானம் ரேடார் அமைப்பில் இருந்து காணாமல் போனது.

சுமார் 45 நிமிடங்கள் கழித்து Mzuzu சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரையிறங்க வேண்டும், ஆனால் அது நடக்கவில்லை என்று கண்டுபிடிக்கப்பட்டது.

ரேடாரில் இருந்து காணாமல் போன விமானத்தை தொடர்பு கொள்ள எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்ததாக மலாவி அதிபர் லாசரஸ் சக்வேராவின் அலுவலகம் அறிவித்துள்ளது.

ஜனாதிபதி விசேட தேடுதல் நடவடிக்கைக்கு உத்தரவிட்டுள்ளதுடன் பஹாமாஸிற்கான தனது திட்டமிட்ட அரச விஜயத்தை இரத்துச் செய்துள்ளார்.

(Visited 18 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி