ஐரோப்பா

65 உக்ரைன் போர் கைதிகளை அழைத்து சென்ற விமானம் விபத்து : ரஷ்யா அறிவிப்பு!

65 உக்ரேனிய போர்க் கைதிகளை ஏற்றிச் சென்ற ரஷ்ய ராணுவ விமானம் மேற்கு ரஷ்யாவின் பெல்கோரோட் பகுதியில் இன்று (24.01) விழுந்து விபத்துக்குள்ளாகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கையின்படி, “பிடிபட்ட” உக்ரேனிய வீரர்கள் உக்ரைனுடனான ரஷ்யாவின் எல்லையில் அமைந்துள்ள பெல்கோரோட் பகுதிக்கு “பரிமாற்றத்தின்” ஒரு பகுதியாக கொண்டு செல்லப்பட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Il-76 இராணுவ போக்குவரத்து விமானத்தில் ஆறு பணியாளர்கள் மற்றும் மூன்று “உடன் சென்ற நபர்கள்” இருந்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குறித்த 65 கைதிகள் பற்றிய மேலதிக தகவல்கள் வெளியாகவில்லை. விபத்துக்கான காரணம் தொடர்பான தகவல்களையும் ரஷ்யா குறிப்பிடவில்லை.

இதேவேளை உக்ரைன் தரப்பில் இருந்தும் எவ்வித கருத்துக்களும் கூறப்படவில்லை.

(Visited 9 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்