இராணுவத்தை 100,000 ஆக குறைக்க திட்டம்!! பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்
பாதாள உலகக் குழுவினரின் துப்பாக்கிச் சூடு மற்றும் ஏனைய குற்றச் செயல்களை கட்டுப்படுத்த சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு, பொலிஸ் மற்றும் விசேட பொலிஸ் பிரிவினரின் தலையீட்டுடன் விசேட வேலைத்திட்டம் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வருவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர், நிகழ்ச்சித் திட்டம் தொடர்பான விபரங்களை தற்போதைக்கு ஊடகங்களுக்கு வெளியிட முடியாது என்றார்.
இராணுவத்தினரின் எண்ணிக்கையை 100,000 ஆக குறைக்கும் யோசனை தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோனிடம் கேட்டுள்ளார்.
2030ஆம் ஆண்டுக்குள் இராணுவத்தினரின் எண்ணிக்கையை 100,000 ஆக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.