மறைந்த கேப்டனின் நினைவிடத்தில் நோன்புக் கஞ்சி வழங்க திட்டம்

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
ரமலான் பிறை தொடங்கிய நாளில் இருந்து இஸ்லாமியர்கள் நோன்பு நோற்பார்கள். ரமலான் மாத இறுதி நாளில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் ரமலான் தொடர்பாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், ரமலான் நோன்பு நாட்களை முன்னிட்டு, கேப்டன் விஜயகாந்த் அவர்களின் கோயிலுக்கு வருகை தரும் மக்கள் அனைவருக்கும், மாலை 6 மணிக்கு மேல் தொழுகை நேரம் முடிந்த பிறகு, நோன்பு இருக்கின்ற 48 நாட்களுக்கும் ரமலான் நோன்பு கஞ்சி வழங்கப்படும் என பிரேமலதா தெரிவித்துள்ளார்.
(Visited 12 times, 1 visits today)