ஜெர்மனியில் புதிய சட்டத்தை அமுல்படுத்த திட்டம்
ஜெர்மனியில் சிறுவர்களை பாதுகாப்பதற்காக புதிய சட்டத்தை அமுல்படுத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனி நாட்டில் சிறுவர் சிறுமிகள் பாதிப்படைந்து வருவது தொடர்பாக புள்ளி விபரம் ஒன்று வெளியாகியுள்ளது.
ஜெர்மனியில் சிறுவர் சிறுமிகள் பாதிப்புக்குள்ளாகும் தன்மைகள் அதிகரித்துள்ளதாக புள்ளி விபரம் ஒன்று தெரிவித்து இருக்கின்றது.
அதாவது குடும்ப சூழலில் ஏற்படும் பாதிப்பு, துஸ்பிரயோகம், கொலை மற்றும் கடத்தல் போன்ற வன்முறை சம்பவங்ளுக்கு சிறுவர்கள் துன்புறுத்தப்படுகின்றமை தெரியவந்துள்ளது.
அதாவது 2022 ஆம் ஆண்டு இளைஞர் விவகார அலுவலகத்துக்கு மட்டும் மொத்தமாக 623000 இவ்வகையான அழைப்புக்கள் சென்றதாக தெரியவந்து இருக்கின்றது.
இது 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 4 சதவீதமான உயர்ச்சி அடைந்துள்ளதாக இந்த புள்ளி விபரத்தில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் கூடுதலாக ஐந்தில் நான்கு பேர் 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சிறுமியர்களாக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
அதனால் ஜெர்மனி அரசாங்கமானது சிறுவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கில் சில சட்ட திட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாக தெரியவந்துள்ளது.
அத்துடன் சிறுவர்களின் பெற்றோர்கள், ஆசிரியர்கள், உறவினர்கள் அனைவரும் அவர்களை அவதானமாக பாதுகாக்கும்மாறு வேண்டுதல் விடுக்கப்பட்டுள்ளது