இலங்கையில் விசேட போக்குவரத்து நடைமுறைகளை பின்பற்ற திட்டம்!
இலங்கையில் நாளை முதல் (23.12) விசேட போக்குவரத்து நடைமுறைகளை பின்பற்ற பொலிஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதன்படி பயணிகள் போக்குவரத்து பஸ்கள் மற்றும் ஏனைய வாகனங்களை சோதனையிடும் நடவடிக்கை நாளை முதல் அமுற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக இடம்பெற்ற விபத்துக்களை கருத்திற்கொண்டு மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பதில் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கமைய இந்த போக்குவரத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, நாளை முதல் பண்டிகைக்காலம் முடியும் வரை, நாடளாவிய ரீதியில் நாடு முழுவதும் போக்குவரத்து நடவடிக்கை அமுல்படுத்தப்படவுள்ளது.
இந்த விசேட நடவடிக்கையின் போது, கவனக்குறைவாக அல்லது போக்குவரத்து விதிகளை மீறி இயங்கும் பேருந்துகள் மற்றும் பிற வாகனங்கள் தொடர்பாக 119 மற்றும் 1997 ஆகிய குறுகிய தொலைபேசி இலக்கங்களுக்கு பொதுமக்கள் தகவல் வழங்க முடியும்.