இஸ்ரேலிய தூதரகம் மீது தாக்குதல் நடத்த திட்டம் : ஒருவர் கைது!
இஸ்ரேலிய தூதரகம் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக சந்தேகிக்கப்படும் நபரை ஜெர்மன் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
பர்லினில் உள்ள இஸ்ரேலிய தூதரகம் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக அவர் மீது குற்றம் சுமத்தப் பட்டுள்ளது.
சந்தேக நபர் நாட்டின் உயர் நீதிமன்றமான Karlsruhe இல் உள்ள பெடரல் நீதிமன்றத்தின் விசாரணை நீதிபதி முன் நிறுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெர்லினில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர், தூதரகத்தை தாக்கும் திட்டம் இருந்ததை dpa க்கு உறுதிப்படுத்தினார்.
தூதரகத்தின் பாதுகாப்பை உறுதி செய்ததற்காக” ஜேர்மன் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இஸ்ரேலிய தூதர் ரான் ப்ரோஸர் நன்றி தெரிவித்துள்ளார்.
(Visited 43 times, 1 visits today)





