இலங்கையில் ஜனவரி முதல் மின் கட்டணத்தை திருத்த திட்டம்!

எதிர்வரும் ஜனவரி மாதம் மின்சாரக் கட்டணங்கள் திருத்தப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் திரு.காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன், புதிய மின்சார சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்பிப்பது அடுத்த அமர்வு வரை தாமதமாகும் என அமைச்சர் இன்று (09.12) பாராளுமன்றத்தில் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதன்படி, புதிய மின்சாரச் சட்டமூலம் தொடர்பில் பல்வேறு தரப்பினர் முன்வைத்த கருத்துக்களுக்கு பதிலளிக்கும் போதே, எதிர்வரும் 12ம் திகதி அல்லது 13ம் திகதி குறித்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட மாட்டாது என அமைச்சர் காஞ்சன விஜேசேகர வலியுறுத்தியுள்ளார்.
(Visited 11 times, 1 visits today)