ஜேர்மனியில் நாச வேலைகளுக்கு திட்டம் : இருவர் அதிரடியாக கைது!
ஜெர்மனியில் ரஷ்யாவிற்காக உளவு பார்த்த சந்தேகத்தின் பேரில் இரண்டு ரஷ்ய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் ஒருவர் உக்ரைனுக்கான உதவியை நாசப்படுத்தும் வகையில்அமெரிக்க இராணுவ வசதிகள் உட்பட சாத்தியமான இலக்குகள் மீது தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்ததாக ஒப்புக் கொண்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
ஜேர்மன் தனியுரிமை விதிகளுக்கு இணங்க Dieter S. மற்றும் Alexander J. என மட்டுமே அடையாளம் காணப்பட்ட இருவரும், பவேரிய நகரமான Bayreuth இல் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
அக்டோபர் முதல் ரஷ்ய உளவுத்துறையுடன் தொடர்புடைய ஒருவருடன் ஜெர்மனியில் சாத்தியமான நாசவேலைகள் பற்றி Dieter S விவாதித்து வருவதாகவும், உக்ரைனுக்கு ஜேர்மனி வழங்கிய இராணுவ ஆதரவைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதே முக்கிய நோக்கம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உக்ரைன் மீது ரஷ்யா தனது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்கியதிலிருந்து, அமெரிக்காவிற்குப் பிறகு உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கும் இரண்டாவது பெரிய சப்ளையராக ஜெர்மனி மாறியுள்ளது. ஜேர்மனியில் அமெரிக்கா ஒரு பெரிய இராணுவ பிரசன்னத்தைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.