பிரதமராகும் வாய்ப்பை இழக்கும் பிடா லிம்ஜரோன்ரட்
சீர்திருத்தங்களுக்கு முன்னுரிமை அளிப்பதாக வாக்குறுதி அளித்து தாய்லாந்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிடா லிம்ஜரோன்ரட், அந்நாட்டின் பிரதமராகும் வாய்ப்பை இழந்துள்ளார்.
அதற்குக் காரணம் நாடாளுமன்றத்தில் தேவையான எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற முடியாமல் போனதுதான்.
அவருக்கும் அவரது உதவியாளர்களுக்கும் கீழ்சபையில் பெரும்பான்மை உள்ளது ஆனால் 249-ஆசனங்கள் கொண்ட செனட்டில் வெற்றிபெற முடியவில்லை.
செனட் உறுப்பினர்கள் முந்தைய இராணுவ ஆட்சியால் நியமிக்கப்படுகிறார்கள்.
“எனது பார்வை மற்றும் செனட் உறுப்பினர்களின் சந்தேகங்களைப் போக்க நான் என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்”… என்று பிடா லிம்ஜரோன்ரட் கூறினார்.
இதேவேளை மூவ் பார்வர்ட் கட்சியின் தலைவரான பிடா லிம்ஜரோன்ரட் மீது இரண்டு முறைப்பாடுகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
இது ஒரு ஊடக நிறுவனத்தில் அவர் பங்குகளை வைத்திருப்பது மற்றும் Les Majeste விதிகளை திருத்த முயற்சிப்பது தொடர்பானது.
அவரது மிகவும் சர்ச்சைக்குரிய பிரச்சார வாக்குறுதிகளில் ஒன்று தாய்லாந்தின் அரச குடும்பச் சட்டங்களைத் திருத்துவதற்கான அவரது தேர்தல் வாக்குறுதியாகும்.