சான் டியாகோவில் அமெரிக்க கடற்படை போர் விமான விபத்தில் விமானி பலி
சான் டியாகோ அருகே விபத்துக்குள்ளான அமெரிக்க மரைன் கார்ப்ஸ் எஃப்/ஏ-18 ஹார்னெட் போர் விமானத்தின் விமானி உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த பிரிவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானத்தில் இருந்த ஒரே நபர் விமானி மட்டுமே என்று செய்தி வெளியிட்டுள்ளது.
விபத்திற்குப் பிறகு அனுப்பப்பட்ட தேடல் மற்றும் மீட்புக் குழுக்கள் விமானியை சம்பவ இடத்தில் கண்டுபிடித்து அவர் உயிரிழந்ததை உறுதிப்படுத்தியதாக வட கரோலினாவில் உள்ள 2வது மரைன் ஏர்கிராப்ட் விங் மற்றும் மரைன் கார்ப்ஸ் ஏர் ஸ்டேஷன் செர்ரி பாயின்ட் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது,
கனத்த இதயத்துடன், இந்த நேரத்தில் கடற்படை வீரரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிக்கிறோம் என கடற்படை தெரிவித்துள்ளது.
கடற்படையினரின் கூற்றுப்படி, விபத்து தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
(Visited 2 times, 1 visits today)