அமெரிக்காவில் விமானத்தின் கழிவறையிலிருந்து பயணியை தரதரவென்று இழுத்து சென்ற விமானி

அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் யுனைட்டெட் ஏர்லைன்ஸ் விமானி வலுக்கட்டாயமாக ஒரு பயணியை விமானத்தின் கழிவறையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் வழக்கு விசாரணை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் நியூ ஜெர்சியை சேர்ந்த யிஸ்ரொல் லிப் விமான நிறுவனம் மீது வழக்கு தொடுத்துள்ளார். நடந்த சம்பவத்தால் நியூயார்க்கிற்குச் செல்லவேண்டிய விமானத்தைத் தவறவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.
ஜனவரி 28ஆம் திகதி அன்று லிப் சுமார் 20 நிமிடங்களுக்கு விமானத்தின் கழிவறையில் இருந்திருக்கிறார். அப்போது விமானி ஒருவர் லிப்புடன் வந்திருந்த பயணியிடம் லிப்பிற்கு ஏதேனும் பிரச்சினையா என்று வினவியிருக்கிறார்.
வயிறு சரியில்லை. விரைவில் கழிவறையிலிருந்து வெளியே வந்துவிடுவேன் என்று லிப் விசாரிக்கச் சென்ற பயணியிடம் கூறியிருக்கிறார்.
10 நிமிடங்கள் கழித்தும் லிப் வெளியே வரவில்லை. பிறகு விமானி லிப்பைப் பார்த்துக் கத்தினார். கதவைத் திறந்து லிப்பைத் தரதரவென்று வெளியே இழுத்தார்.
அப்போது லிப் காற்சட்டை அணியாததால் அவர் நிர்வாணமாக இருந்ததாக லிப் வழக்கு விசாரணையில் குறிப்பிட்டுள்ளார். விமானி அவரை இருக்கையில் உட்கார வைத்து மிரட்டியதாகக் கூறப்படுகிறது. 2 மணிநேரம் கழித்து விமானம் தரையிறங்கியது.
சுங்கச்சாவடி, எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் லிப்பையும் அவருடன் பயணம் செய்தவரையும் கைவிலங்கிட்டுத் தடுத்து வைத்தனர்.