காஷ்மீரில் யாத்திரைக்குச் சென்ற பேருந்து விபத்து : 10 பேர் பலி!

காஷ்மீரில் உள்ள புனித தலமொன்றுக்கு யாத்திரைச் சென்ற பேருந்தொன்று இமயமலைப் பள்ளத்தாக்கில் தவறி விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன், 55 பேர் காயமடைந்துள்ளனர் என காவல்துறை தெரிவித்துள்ளது.
வட மாநிலமான பஞ்சாபின் அமிர்தசரஸ் நகரத்திலிருந்து கத்ரா நகருக்குச் சென்று கொண்டிருந்த பேருந்து, ஜம்மு நகருக்கு அருகே உள்ள பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து உள்ளூர் போலீஸ் அதிகாரி சந்தன் கோஹ்லி செய்தியாளர்களிடம் கூறுகையில், இறந்தவர்கள் இந்தியாவின் கிழக்கு பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் விபத்துக் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
(Visited 13 times, 1 visits today)