அமெரிக்காவில் முதன்முறையாக H5N1 பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பன்றி கண்டுபிடிப்பு

அமெரிக்காவில் முதன்முறையாக H5N1 பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பன்றி அடையாளம் காணப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ஓரிகான் மாகாணத்தில் உள்ள பண்ணை ஒன்றில் வளர்க்கப்பட்ட பன்றிக்கு பறவைக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த பன்றியுடன் தங்கியிருந்த மேலும் இரண்டு பன்றிகளுக்கும் வைரஸ் தொற்று உள்ளதா என்பதை கண்டறியும் ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த பறவை காய்ச்சல் வைரஸ் 2020 முதல் பறவைகள் மத்தியில் வேகமாக பரவியது.
(Visited 13 times, 1 visits today)