தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் மாயமான புறாக்கள் – பொறுப்பாளர் பணியிடைநீக்கம்!

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் 32 புறாக்கள் திருடப்பட்ட விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த பறவைகள் கடந்த வெள்ளி, சனிக்கிழமைகளில் (03) திருடப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இது தொடர்பில் அப்பிரிவின் பொறுப்பதிகாரியை பணியிடை நீக்கம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக அதன் பிரதிப் பணிப்பாளர் ஹேமந்த சமரசேகர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தெஹிவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திருடப்பட்ட புறாக்கள் குறித்து இதுவரை எந்தவித தகவலும் கிடைக்கவில்லை எனவும் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெஹிவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
(Visited 9 times, 1 visits today)