மும்பையில் இசை நிகழ்ச்சியில் 24 லட்சம் மதிப்புள்ள தொலைபேசிகள் கொள்ளை
மும்பையில் பாப் பாடகர் என்ரிக் இக்லெசியாஸின்(Enrique Iglesias) இசை நிகழ்ச்சியின் போது, கிட்டத்தட்ட 23.85 லட்சம் மதிப்புள்ள 73 தொலைபேசிகள் திருடப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பாந்த்ரா குர்லா(Bandra Kurla) வளாகத்தில் உள்ள MMRDA மைதானத்தில் நடந்த இசை நிகழ்ச்சியில் நடந்த திருட்டுகள் குறித்து காவல்துறையினர் ஏழு வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.
திருட்டு வழக்குகளில் புகார் அளித்தவர்களில் ஒப்பனை கலைஞர், ஹோட்டல் உரிமையாளர், மாணவர்கள், ஒரு பத்திரிகையாளர் மற்றும் தொழிலதிபர்கள் அடங்குவர்.
மும்பையில் தனது முதல் நிகழ்ச்சியில் இவ்வாறு நடந்ததற்கு உலகளாவிய இசை பிரபலமும் கிராமி விருது வென்றவருமான என்ரிக் இக்லெசியாஸ் கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
(Visited 5 times, 5 visits today)





