ஐரோப்பா

உக்ரைன் மீதான அமைதிக்கான உச்சநிலைக் மாநாட்டில் பிலிப்பைன்ஸ் பங்கேற்கும் ; ஸெலென்ஸ்கி

சுவிட்சர்லாந்தில் இம்மாதம் நடைபெற இருக்கும் அமைதிக்கான உச்சநிலை மாநாட்டில் பிலிப்பைன்ஸ் பங்கேற்க இருப்பதாக உக்ரேனிய அதிபர் வெலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்து உள்ளார்.

மணிலாவுக்கு திடீர் வருகை மேற்கொண்ட ஸெலென்ஸ்கி இத்தகவலை தமது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த வார இறுதியில் சிங்கப்பூரில் நடைபெற்ற ஷங்ரிலா கலந்துரையாடலில் அவர் கலந்துகொண்டார்.எந்த ஒரு பயணத் திட்டமும் இன்றி சிங்கப்பூர் வந்த அவர், ஆசிய-பசிபிக் தலைவர்களைச் சந்தித்து அமைதிக்கான உச்சநிலைக் கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தார்.

ஜூன் 15, 16 திகதிகளில் நடத்தத் திட்டமிடப்பட்டு இருக்கும் அந்தக் கூட்டத்தில், போரால் பாதிக்கப்பட்டு உள்ள உக்ரைனில் அமைதியை நிலைநாட்டுவது குறித்து விவாதிக்கப்பட உள்ளது.இதற்கிடையே, மணிலாவில் பிலிப்பைன்ஸ் அதிபர் ஃபெர்டினண்ட் மார்க்கோசுடன் நடத்திய சந்திப்பு குறித்து எக்ஸ் பதிவில் ஸெலென்ஸ்கி தகவல் வெளியிட்டார்.

“உலக அமைதி உச்சநிலை மாநாடு தொடங்கப்படுவது குறித்தும் அதில் பங்கேற்பதில் தென்கிழக்கு ஆசியாவுக்கு இருக்கும் முக்கியத்துவம் குறித்தும் நாங்கள் இருவரும் ஆலோசித்தோம்.“பிலிப்பைன்ஸ் அந்தக் கூட்டத்தில் பங்கேற்கிறது என்ற நல்ல தகவலை தெரிவிக்கிறேன்,” என்று அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டு உள்ளார்.

தற்போதைய நிலையில், அந்தக் கூட்டத்தில் மார்கோஸ் பங்கேற்பாரா அல்லது உயர்நிலை அதிகாரி பங்கேற்பாரா என்பது பற்றி தெளிவான தகவல் இல்லை.

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!