இலங்கையில் நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பெற்றோலின் விலை குறைப்பு!
இலங்கையில் இன்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை திருத்தியமைக்க இலங்கை பெற்றோலிய சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி 377 ரூபாவாக இருந்த ஒக்டேன் 95 லீற்றரின் விலை 06 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
319 ரூபாவாக இருந்த ஒரு லீற்றர் சுப்பர் டீசலின் விலை 06 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், மற்ற வகை எரிபொருட்களின் விலையில் மாற்றமில்லை என பெற்றோலிய சட்டரீதியான கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.





