இலங்கை

யாழில் மாவீரர் தின நிகழ்வுகளை தடைசெய்யக்கோரி மனுத்தாக்கல்!

யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெறும் மாவீரர் தின நிகழ்வுகளை தடை செய்ய உத்தரவிட கோரி யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளினால் இன்றைய (25.11) தினம் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த மனு மீதான விசாரணை எதிர்வரும் திங்கட்கிழமை(27.11) காலை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் இடம் பெறவுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், கோப்பாய் துயிலுமில்லம், நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவிடத்திற்கு முன்பாக அமைக்கப்பட்ட நினைவு மண்டபம் என்பவற்றில் மாவீரர் நாள் நினைவேந்தல் நடைபெறவுள்ள நிலையில்,  அதற்கு தடை கோரியே மனு தாக்கல் செய்யப்பட்டது.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!