வேற்று கிரகவாசி உடல்கள் தொடர்பில் பெரு அரசாங்கம் குற்றச்சாட்டு
சமீபத்தில் மெக்சிகோ பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வேற்று கிரகவாசிகளின் அசாதாரண உடல்களை வழங்கிய மெக்சிகோ பத்திரிகையாளர் ஜேமி மௌசன் (70) மீது பெரு அரசு குற்றம் சாட்டியுள்ளது.
ஜேமி மௌசன், மெக்சிகோ பாராளுமன்றத்தின் முன் வேற்றுகிரகவாசிகளின் உடல்களை காட்சிப்படுத்தியபோது, 2017 ஆம் ஆண்டில் பெருவில் அவற்றைக் கண்டுபிடித்ததாகக் கூறினார்.
பெருவில் இருந்து மெக்சிகோவிற்கு படிமமாக்கப்பட்ட வேற்றுகிரகவாசிகளின் உடல்களை கொண்டு சென்றதாக ஜேமி மௌசன் மீது பெருவியன் அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இது சட்டவிரோதமான செயல் என்றும், பெரு நாட்டு அரசுக்கு இது குறித்து எதுவும் தெரியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெருவில் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டால், அவை பெருவைச் சேர்ந்தவை என்றும், அவற்றை ரகசியமாக மெக்சிகோவிற்கு கொண்டு செல்வது தவறு என்றும் மௌசன் விளக்கினார்.
இந்த விவகாரம் குறித்து பதிலளித்துள்ள ஜேமி மௌசன், பெருவிலிருந்து மெக்சிகோவிற்கு எப்படி படிம உடல்களை கொண்டு வந்தேன் என்பதை வெளியிடப்போவதில்லை என விளக்கமளித்துள்ளார்.