சிங்கப்பூரில் இன்று முதல் கிடைக்கும் அனுமதி
சிங்கப்பூரில் வீட்டு வசதி மேம்பாட்டுக் கழக வீடுகளில் பூனைகளை வளர்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பூனையை வைத்துக் கொள்ள உரிமம் பெறும் திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது.
பூனைகளுக்கு மைக்ரோசிப் பொருத்த, உரிமம் பெற இன்று முதல் இரண்டு ஆண்டுகள் அவகாசம் வழங்கப்படுகிறது.
கழக வீட்டில் வசிப்பவர்கள் அனுமதிக்கப்படும் வகையைச் சேர்ந்த ஒரு நாயையும், இரண்டு பூனைகளையும் வளர்க்கலாம்.
தனியார் வீட்டில் வசிப்பவர்கள் மூன்று பூனை அல்லது நாய் வளர்க்கலாம். அல்லது இரண்டையும் சேர்ந்த மூன்று செல்லப் பிராணிகளை வைத்திருக்கலாம்.
இது குறித்து வீடமைப்பு வளர்ச்சி கழகம் மற்றும் விலங்குநல மருத்துவ சேவை நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
முதல்முறை பூனை அல்லது நாய் வளர்க்க உரிமம் பெற விண்ணப்பிப்பவர்கள் இலவச ஒன்லைன் செல்லப்பிராணி பராமரிப்பு பயிற்சி பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.