இலங்கை

மக்களின் கோரிக்கைகளும் யதார்த்தமான அபிலாசைகளும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியவை : டக்ளஸ்

மக்களின் நியாயமான கோரிக்கைகளும் யதார்த்தமான அபிலாசைகளும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டியவை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி சமூகத்தின் அழைப்பினையேற்று, கல்லூரிக்கு இன்று(24.11.2023) விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாடசாலை சமூகத்தின் எதிர்பார்ப்புக்கள் கோரிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி சமூகத்தின் கோரிக்கைகளில் இருக்கின்ற யதார்த்தினை புரிந்து கொள்கின்றமையினால், அதற்கு பூரண ஒத்துழைப்பினை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

“மகாஜனாக் கல்லூரியின் வளர்ச்சியில் காத்திரமான பங்களிப்பினை வழங்கி வருகின்ற இரண்டு ஆசிரியர்களுக்கான இடமாற்றங்களை இரத்து செய்து தருமாறு என்னை வந்து சந்தித்த பாடசாலை சமூகத்தினரால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

எப்போதும் பெரும்பான்மை கருத்துக்களில் நியாயம் இருப்பின் அதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் எனும் நிலைப்பாட்டை கொண்ட நான், பாடசாலை சமூகத்தினரின் பூரண ஆதரவு இருக்குமாயின் அதற்கு எனது ஒத்துழைப்பும் இருக்கும் என்பதை கூறியிருந்தேன்.

அதனை உறுதிப்படுத்தும் வகையில் இன்று உங்கள் முன்னிலையில் வந்திருக்கின்றேன். இந்தளவிற்கு பெருந்தொகையானோர் திரண்டு வந்து உங்களின் ஆதரவை வெளிப்படுத்துவீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை.

உங்களின் எதிர்பார்ப்புக்களான இரண்டு சிரேஸ்ட ஆசிரியர்களும் இந்தப் பாடசாலையில் தொடர்ந்தும் பணியாற்றுவதற்கு தேவையான பூரண ஒத்துழைப்பினை நான் வழங்குவேன். இந்தப் பிரச்சினையை மாகாண மட்டத்தில் தீர்க்க முடியும் என்று நம்புகின்றேன்.

முடியாவிட்டால், மத்திக்கு எடுத்துச் சென்றாவது சாதகமான முடிவை பெற்றுத்தருவதற்கு தயங்க மாட்டேன். என்னைப் பொறுத்தவரையில், மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு எதிரான அனைத்து தடைகளையும் உடைத்தெறிந்து அவற்றை நிறைவேற்றுவதே என்னுடைய அணுகு முறையாக இருக்கின்றது.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இ்ந்த விவகாரம் தொடர்பான செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், யாழ் மத்திய கல்லூரி, வேம்படி மகளீர் கல்லூரி, மகாஜனாக் கல்லூரி ஆகிய பாடசாலைகளின் நிர்வாகத்தினுள் மூக்கை நுழைத்து நான் குழப்பங்களை ஏற்படுத்துவதாக அநாமதேய சமூக ஊடகங்களில் கருத்துக்கள் பரப்பப்பட்டன.

இவ்வாறான வசைபாடல்கள் சேறடிப்புக்கள் தொடர்பாக நான் அலட்டிக் கொள்வதில்லை. எனினும், பாடசாலை சமூகங்களினால் அழைப்பு விடுக்கப்படுகின்ற நிலையிலேயே தலையிட்டு பிரச்சினைகளை தீர்த்து வைத்து வருகின்றேன்.

இதேபோன்று பத்து வருடங்களுக்கு முன்னர் உடுவில் மகளீர் கல்லூரியின் அதிபர் நியமனம் தொடர்பிலும் தலையிட்டு தீர்த்து வைத்திருந்தேன். இவ்வாறு பல உதாரணங்களை சொல்ல முடியும்” என்று தெரிவித்தார்

இக்கலந்துரையாடலில், பாடசாலை அதிபர், முன்னாள் அதிபர்கள், அயல் பாடசாலைகள் சிலவற்றின் அதிபர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு தங்களின் எதிர்பார்ப்பின் நியாயத்தினை வெளிப்படுத்தினர் இதன்போது, பாடசாலையின் உட்கட்டுமான வசதிகளை பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மாணவர்களுடனும் கலந்துரையாடினார்.-

(Visited 6 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!