பிரித்தானியாவில் சூறாவளியால் வீடுகளை இழந்த மக்கள்!
பிரித்தானியாவின் கிரேட் மென்செஸ்டரின் ஒரு பகுதியை சூறாவளி தாக்கியதில் வீடுகள் சேதமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கெரிட் புயல் தாக்கத்தால் ஸ்கொட்லாந்து உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. நேற்று இரவு மின்சாரம் வழமைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சூறாவளி ஏற்பட்டு பல சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.
லிபரல் டெமாக்ராட்கள் ரிஷி சுனக்கை சூறாவளிக்குப் பிறகு கோப்ரா கூட்டத்தை கூட்டுமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.
“அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் இல்லை, ஆனால் நிச்சயமாக உள்ளூர்வாசிகள் தங்கள் வீடுகளுக்கு ஏற்பட்ட சேதத்தால் பேரழிவிற்கு ஆளாகியுள்ளனர் என்று Tameside கவுன்சிலின் நிர்வாகத் தலைவர் Ged Cooney கூறினார்.






