ஜெர்மனியில் பல்லாயிரம் யூரோக்களை செலவிட்டு வதிவிட விசா பெற்ற மக்கள் – சிக்கிய அதிகாரி
ஜெர்மனியில் வெளிநாட்டு விடயங்கள் தொடர்பில் அவதானிக்கப்படும் அலுவலகத்தில் மோசடியில் ஈடுப்பட்ட பணியாளர் பணியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஒஸ்லாபோர்க் என்ற பிரதேசத்தில் உள்ள வெளிநாட்டவர் காரியாலயத்தில் கடமையாற்றிய அதிகாரி ஒருவர் முறைக்கேடான ரீதியில் பலருக்க வதிவிட விசாக்களை வழங்கியுள்ளார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் முறைக்கேடான ரீதியில் பலருக்கு இந்த நாட்டில் பிரஜா உரிமை வழங்கினார் என்றும் இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த அதிகாரி இவ்வகையான வதிவிட விசாவை பெற வந்தவர்கள் மற்றும் ஜெர்மனி நாட்டில் பிரஜா உரிமை பெற வந்தவர்களிடமும் பணத்தை பெற்றுக்கொண்டதாக தெரியவந்துள்ளது.
இவர் மொத்தமாக 41650 யூரோக்களை சட்ட ரீதியான முறையில் பணத்தை பெற்றுக்கொண்டார் என்ற குற்றசாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்பொழுது இவர் மேலதிகமாக 7094 யூரோக்களை குறித்த வெளிநாட்டவர்களிடம் பெற்றுக்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
தற்பொழுது இவர் தனது பணியில் இருந்து இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
பணி இடை நிறுத்தம் தொடர்பில் குறித்த நபர் நீதிமன்றத்தை நாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.