ஜெர்மனியில் வேலைக்கு செல்வதனை தவிர்க்கும் மக்கள் – பின்னணி தொடர்பில் வெளியான தகவல்
ஜெர்மனியில் மக்கள் வேலைக்கு செல்லாமல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மது பிரியர்களின் எண்ணிக்கையானது தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்ற நிலையில் அவர்கள் வேலைக்கு செல்வதில்லை என தெரியவந்துள்ளது.
ஜெர்மனியில் மது பிரியர்களுடைய எண்ணிக்கையானது மிகவும் அதிகரித்துள்ளதாக புள்ளி விபரம் ஒன்று வெளியாகியுள்ளது.
இவ்வாறு மதுக்கு அடிமையாகியதால் வேலைக்கு செல்லாதவர்களுடைய எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஜெர்மனியின் சுகாதார காப்புறுதி நிறுவனமான ஆஓகா என்ற அமைப்பானது புள்ளி விபரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதாவது 100 நாட்கள் வேலைக்கு செல்லும் பொழுது இவ்வாறு மதுவின் காரணமாக உடல் நிலை பாதிக்கப்பட்டவர்கள் சராசரியாக 15.3 நாட்கள் இவ்வாறானவர்கள் வேலைக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளார்கள் என தெரியவந்துள்ளது.
இந்நிலையில் வயது அடிப்படையில் 50 வயதுக்கும் 59 வயதுக்கும் இடையில் உள்ளவர்கள் மதுக்கு அடிமையான காரணத்தினால் 100 நாட்கள் வேலை செய்யும் பொழுது 27 நாட்கள் வேலைக்கு சமூகமளிக்காமல் இருப்பதாக புள்ளி விபரம் சுட்டிக்காட்டியுள்ளது.