பொதுத் தேர்தலில் 50 வயதுக்குட்பட்டவர்களுக்கு அதிக வாய்ப்பு – நாமல் ராஜபக்ஷ

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலின் போது இளம் வேட்பாளர்களுக்கும் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி பிரதிநிதிகளுக்கும் அதிக வாய்ப்புகளை வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
50 வயதிற்குட்பட்ட நபர்களுக்கும் அதிக வாய்ப்புகள் வழங்கப்படும் என்று அவர் வலியுறுத்தினார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் காலியாக உள்ள மாவட்ட மற்றும் தேர்தல் அமைப்பாளர் பதவிகள் விரைவில் நிரப்பப்படும் என்றும், இளம் தலைமைத்துவத்தை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்தப்படும் என்றும் ராஜபக்ச மேலும் குறிப்பிட்டார்.
(Visited 25 times, 1 visits today)